தாமரை விதை என்று அழைக்கப்படும் மக்கானா ஒரு நல்ல ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆகும். வறுத்த, பொறித்த உணவுகளை தவிர்த்து இதை குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். கடாயில் சிறிது நெய் ஊற்றி மக்கானாவை நன்கு மொறுமொறுப்பாகும் வரை வறுத்து எடுக்க வேண்டும். இதை அப்படியே சாப்பிடலாம். இல்லையென்றால் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு கலந்து சாப்பிடலாம். இதில் கால்சியம், புரதம், தாதுக்கள் என பல நிரம்பி உள்ளன. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.