விபத்தில் காயம் அடைந்த பெண் காவலர் சிகிச்சை பலன் இன்றி பலி

56பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே
ஆத்திபட்டி ஜெயராம் நகரை சேர்ந்தவர் மகேஷ் குமார்(50). அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். ‌
இவர் தனது மனைவி அங்கயற்கண்ணி(45). இவர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் மகேஷ் குமார் தனது மனைவி அங்கயற்கண்ணியுடன்
சொந்த வேலையாக கோவில்பட்டி சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தார். ‌ அப்போது அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி புறவழிச்சாலையில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கொப்புசித்தம்பட்டி விலக்கு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மகேஷ் குமார் & அங்கயற்கன்னி இருவரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பந்தல்குடி போலீசார் இருவரையும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அங்கயற்கண்ணி மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அங்கயற்கண்ணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பந்தல்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர். ‌

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி