விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூரைக்குண்டு ஊராட்சியை விருதுநகர் நகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கூரைக்குண்டு ஊராட்சியை விருதுநகர் நகராட்சி உடன் இணைப்பது தொடர்பான அறிவிப்பு வந்ததிலிருந்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விருதுநகர் நகராட்சியுடன் கூரைக்குண்டு ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும் அறிவிப்பை திரும்ப பெறக் கோரியும் இந்த ஊராட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும், பதாகைகளை கையில் ஏந்தியும் செவல்பட்டி அருகே அழகாபுரியில் உள்ள விருதுநகர் திமுக எம்எல்ஏ ஏ ஆர் ஆர் சீனிவாசன் இல்லத்தை முற்றுகையிட முயன்ற போலீசார் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கிராம மக்கள் உடன் போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விருதுநகர் எம்எல்ஏ இல்லத்திற்கு சென்று அவரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். பேசிய கூரைக்குண்டு ஊராட்சியை சேர்ந்த கவிதா, கூரைக்குண்டு ஊராட்சியை விருதுநகர் நகராட்சியுடன் இணைப்பதை எதிர்ப்பு தெரிவித்தும் அந்த அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். கிராம ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதால் கொண்டு இந்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.