வாணியம்பாடி - Vaniyambadi

ஒடுகத்தூர் வாரச்சந்தை. 17 லட்சத்திற்கு ஏலம்

ஒடுகத்தூர் வாரச்சந்தை. 17 லட்சத்திற்கு ஏலம்

ஒடுகத்தூர் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமைதோறும் காலையில் ஆட்டுச்சந்தையும், மாலையில் வாரச்சந்தையும் நடைபெற்று வருகிறது. இந்த வாரச்சந்தையை நடத்துவதற்கான 2025-2026-ம் ஆண்டுக்கான ஏலம் ஒடுகத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில், பேரூராட்சி செயல் அலுவலர் க. குமார் தலைமையில் நடைபெற்றது.  ஏலம் கேட்க தலா ரூ. 2½ லட்சம் முன்பணம் கட்டி 15 பேர் ஏலத்தில் பங்கேற்றனர். ரூ. 5 லட்சத்தில் இருந்து ஏலம் தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் நடந்த இதில் ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த என். மணி என்பவர் ரூ. 9 லட்சத்து 87 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். தொடர்ந்து, ஆட்டுச்சந்தைக்கான ஏலம் ரூ. 7 லட்சத்து 27 ஆயிரத்துக்கும், புளியமரம் ரூ. 23 ஆயிரத்திற்கும், தென்னைமரம் ரூ. 6 ஆயிரத்திற்கும், ஆடு அடைக்கும் தொட்டி ரூ. 8 ஆயிரத்துக்கும் ஏலம் விடப்பட்டது.  இதில் ஏலத்தொகையுடன் வருமானவரி 2 சதவீதம் மற்றும் ஜி.எஸ்.டி. 18 சதவீதம் சேர்த்து ரூ. 21 லட்சம் செலுத்தப்பட்டது. ஏப்ரல் மாதம் முதல் சந்தையை நடத்துவதற்கான ஆணையை பேரூராட்சி செயல் அலுவலர் க. குமார் வழங்கினார்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా