வாணியம்பாடியில் சர்வதேச நதிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பாலாறு பாதுகாப்பை வலியுறுத்தி பாலாறு பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் பேரணியாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சர்வதேச நதிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பாலாறு பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் பாலாறு பாதுகாப்பை வலியுறுத்தி பாலாறு தொடங்கும் பகுதியான புல்லூர் தடுப்பணையில் இருந்து தொடங்கி திம்மாம்பேட்டை, ஆவாரங்கபுரம், அம்பலூர், ராமநாயக்கன்பேட்டை, வாணியம்பாடி வழியாக ஆம்பூர் வரை பாலாற்றின் கரையோர கிராமங்கள் மற்றும் நகரங்களின் வழியாக சென்று பாலாற்றில் கழிவுகளை கொட்டாமல் பாலாற்றை பாதுகாக்க வேண்டும் என்று கூறி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி பரப்புரை மேற்கொண்டனர்.