வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே ரயில்வே தண்டவாளம் அருகில் கேட்பாரற்று கிடந்த பையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்.
வாணியம்பாடி நகர காவல் துறையினர் விசாரணை 5
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளம் அருகில் ஒரு பை கேட்பாரற்று இருந்ததை கண்டறிந்தனர். அங்கு சென்று பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அந்த பையில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். மேலும் காவல்துறையினர் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த 12 கிலோ கஞ்சா இருப்பதை அறிந்து இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததை கண்டு அந்த பையை அங்கேயே வீசிவிட்டு சென்றார்களா? மேலும் அந்த கஞ்சாவுடன் பையை விட்டு சென்ற நபர் யார்? எனபது குறித்து வாணியம்பாடி நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.