வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட பாமக அலுவலகத்தில் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் ஜெகன், மாநில துணைத்தலைவர்கள் இளவழகன், சண்முகம் உள்ளிட்ட பாமகவினர் கலந்து கொண்டனர். இதில் மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு நாளில் மாநாட்டில் கலந்துகொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.