அங்கன்வாடி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியையால் பாதுகாப்புஇல்லை

54பார்த்தது
வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பாப்பானேரி பகுதியில் அங்கன்வாடி பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
அங்கு குழந்தைகளுக்கு தண்ணீர் வழங்க கூடிய தொட்டி பல மாதங்களாக சுத்தம் செய்யாமல் புழுக்கள் மிதக்கும் வகையில் உள்ள அசுத்தமான தண்ணீரை பயன்படுத்துவதாகவும் இதனால் குழந்தைகளுக்கு பல்வேறு நோய் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளதாகவும், சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகள் குறைவான அளவு அழுகிய காய்கள் பயன்படுத்துவதாகவும், முறையாக சத்துணவு மற்றும் முட்டை வழங்கவில்லை எனவும், அடிப்படை வசதிகள் மற்றும் தரமற்ற முறையில் உணவுகள் சமைத்து வழங்குவதாக குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் பள்ளி குழந்தைகள் நெடுஞ்சாலையை கடந்து வருவதால் பாதுகாப்பற்ற முறையில் வருவதாகவும் இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அங்கன்வாடி பள்ளியில் பணியாற்றக்கூடிய ஆசிரியை மோகனவள்ளி மற்றும் உதவியாளர் மகாலட்சுமி ஆகியோர் குழந்தைகளை அடிப்பதாகவும், குழந்தைகளுக்கு முறையாக பாடம் கற்றுத் தருவதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி