திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் (இன்று மார்ச் 7) அகில இந்திய பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிருபர் சங்கத்தின் தேசிய தலைவர் மின்னூர் எம்.ஜி.யுவராஜ். தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு மூலமாக பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் சங்கங்கள் பல ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு அரசு பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நலவாரியத்தில் பத்திரிகை முதலாளிகள் மட்டுமே அதிகாரம் உள்ளது. இதனால் சாதாரண பத்திரிகை சங்கங்களுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை. இதனால் எந்த பத்திரிகையாளர்களுக்கும் சரிவர எந்த சலுகையும் கிடைக்கவில்லை. நலவாரியம் நீக்கிவிட்டு மீண்டும் சங்கங்களுக்கு அதிகாரம் வழங்க கோரிக்கை.