வாணியம்பாடியில் அண்ணன் இறந்த செய்தியை கேட்ட தங்கை உயிரிழப்பு
அண்ணன் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு தங்கை உயிரிழந்த சோகத்தால் பரபரப்பு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வலையாம்பட்டு பகுதியை சார்ந்த சீனிவாசன் வயது 90 சிலம்பாட்ட வீரர் இவருக்கு பத்து பிள்ளைகள் உள்ளனர். உடல்நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தவர், நேற்று உயிரிழந்துள்ளார். வீட்டின் அருகே உள்ள தங்கை நவமணி வயது 78 அண்ணன் இறந்த துயரத்தை கேட்ட தங்கை நொடிப் பொழுதில் உயிரிழந்துள்ளார். அண்ணன் மற்றும் தங்கை இருவரின் சடலமும் ஓரிடத்தில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.