திருச்சி மாவட்டம் முசிறியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
முசிறி காவல்துறை, முசிறி எம் ஐ டி கல்வி குழுமங்கள் , ஜேசிஐ மற்றும் பசுமை சிகரம் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை முசிறி காவல் உதவி ஆய்வாளர் சுஜாதா துவக்கி வைத்தார். சமூக ஆர்வலர்கள் யோகநாதன், துரைராஜ், சரவணன், கமல் உள்ளிட்ட பலர் போதை பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினர். அதனைத் தொடர்ந்து முசிறி எம் ஐ டி கல்லூரியின் மாணவ மாணவிகள் கைகளில் போதை பொருட்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும் , துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் சமூக ஆர்வலர்கள் போக்குவரத்து போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.