சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சற்றுமுன்னர் தொடங்கியது. மார்ச் 14-ல் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இடம்பெறும் திட்டங்கள் குறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மத்திய, மாநில அரசுகளின் உறவு தொடர்பான முக்கியமான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.