தமிழகத்தில் இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் தொடங்கியுள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், பெரியார், திருவள்ளுவர் உள்ளிட்டோரின் உருவம் பொறித்த ஆடையை அணிந்து, ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். தமிழ் நாட்டைத்தான் விட்டு வந்திருக்கிறோம், தமிழை அல்ல என கோஷமிட்டனர்.