சில நாட்களாக தமிழகத்தில் இந்தி திணிப்பிற்கு எதிராக பலர் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசின் DD தமிழ் தொலைக்காட்சியில் இந்தியில் சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகியுள்ளது. அதாவது DD தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே பேசுகிறார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனங்களை எழுப்பி வருகிறது.