திருச்சி: 'ஜெ' பிறந்தநாளில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

83பார்த்தது
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் அம்மாபேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மணிகண்டம் தெற்கு ஒன்றிய கழக பொருளாளர் சேகர் மணி ஏற்பாட்டில் 500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில்

ஐடிவிங் ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த்,
எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் நல்லுச்சாமி,
இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் பாகனூர் மணிகண்டன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இணைச்செயலாளர் செல்வம் பட்டையர் மற்றும் நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி