தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் குறையும் அபாயம் உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்தால், தமிழ்நாடு 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டியிருக்கும். 2-வது முறையின்படி மறுசீரமைப்பு செய்தால், நமக்குக் கூடுதலாக கிடைக்க வேண்டிய 22 தொகுதிகளுக்குப் பதிலாக, 10 தொகுதிகள் மட்டுமே கிடைத்து, 12 தொகுதிகளை நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்" என்று தெரிவித்துள்ளார்.