புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாரடைப்பால் சிலம்பம் ஆசிரியர் சிவகணேசன் உயிரிழந்த நிலையில், அவரது மாணவர்கள் அழுதபடியே சிலம்பம் சுற்றி அஞ்சலி செலுத்தினர். கபடி வீரரான இவர், நேற்று கபடி விளையாடும்போது கையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை முடிந்த உடனே மீண்டும் விளையாடச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரிடம் சிலம்பம் கற்றுக்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் அழுது கொண்டே சிலம்பம் சுற்றி தனது குருவுக்கு அஞ்சலி செலுத்தினர்.