
ஸ்ரீரங்கம் கோவிலில் 1. 24 கோடி பக்தர்கள் காணிக்கை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நேற்று மாதாந்திர உண்டியல்கள் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலரான மாரியப்பன் தலைமையில், திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலரான சுரேஷ் மேற்பார்வையில், கோவில் மேலாளர் பிரேமலதா, திருக்கோவில் நிலை செயல் அலுவலர்கள் வேல்முருகன், வெங்கடேசன், சக்திவேல், நிர்மலா, கோவில் ஆய்வாளர்கள் மங்கையர்செல்வி, உமா, சரசு ஆய்வாளர் பாஸ்கரன், திருவரம்பூர் ஆய்வாளர் பானுமதி, கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வாயிலாக ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல்கள் நேற்று காலை 7:00 மணி முதல் எண்ணப்பட்டது. கணக்கெடுப்பின் முடிவில் மாதாந்திர உண்டியல்கள் திறப்பில் 1 கோடியே 24 ஆயிரத்து 547 ரூபாய் ரொக்கம், தங்கம் 173 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 281 எண்ணிக்கையில் கிடைக்கப்பெற்றது என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.