திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் பள்ளி கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான 40வது பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள் ஆறு நாட்கள் நடைபெறும் நிலையில், முதல் மூன்று நாட்கள் பெண்களும், அடுத்த மூன்று நாட்கள் ஆண்கள் போட்டிகளும் நடைபெற உள்ளது, 38 மாவட்டங்களில் இருந்து ஆறு முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் கைப்பந்து, ஹாக்கி, பூப்பந்து, எரிபந்து, பேஸ்கெட் பால் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும் நிலையில் எரிபந்து போட்டியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பந்து எரிந்து போட்டியை துவக்கி வைத்தார்,
தொடக்க விழாவில் விளையாட்டுப் போட்டிகளில் 38 மாவட்டங்களில் இருந்து 4000 மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர், விழாவில் இணை இயக்குனர் சசிகலா, திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, கொங்குநாடு பொறியியல் கல்லூரி தாளாளர் பெரியசாமி மற்றும் பலர் விளையாட்டு ஆசிரியைகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.