துறையூர் பகுதியில் நேற்று முப்பது மில்லி மீட்டர் மழை பதிவு

74பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை முப்பது செண்டிமீட்டர் மழை அளவு பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. துறையூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாகவே புயலின் காரணமாக காலை முதல் இரவு வரை விடிய விடிய சாரல் மழை பொழிந்து வந்தது. இடையிடையே பலத்த மழை பொழிந்தது. இதில் துறையூர் பகுதியில் 30 செண்டிமீட்டர், கொப்பம்பட்டியில் 30 செண்டிமீட்டர், தென்புறநாடு பகுதியில் 17 செண்டிமீட்டர் மழை பதிவாகி இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி