கஜகஸ்தானில் 72 பேருடன் சென்ற பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அக்தாவு விமான நிலையம் அருகே விமானம் விழுந்து நொறுங்கிய நிலையில், தீப்பிடித்து எரிந்தது. முன்னதாக வானில் சில நிமிடம் வட்டமடித்த விமானம் திடீரென தரையில் விழுந்தது. அஜர்பைஜான் நாட்டைச் சேர்ந்த இந்த விமானம் விபத்தில் சிக்கிய நிலையில், பயணிகள் பலரும் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.