மறைந்த தமிழக முதல்வர் அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆர் அவர்களின் 37வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம் துறையூரில் எம்ஜிஆர் நற்பணி மன்ற நகர அமைப்பாளர் சங்கர் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் எம்ஜிஆர் திருவுருவப் படத்துடன் சிலோன் ஆபீஸ் பகுதியில் இருந்து ஆஸ்பத்திரி சாலை பெரிய கடை வீதி வழியாக மீண்டும் சிலோன் ஆபீஸ் பகுதியை ஊர்வலம் வந்தடைந்தது. இந்த நிகழ்வில் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.