திருவரம்பூர் அருகே உள்ள காட்டூர் பாலாஜி நகையை சேர்ந்தவர் வீராங்கன் இவருக்கு சொந்தமான வீடுகளில் ஒன்றில் அழகர் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில் அழகர் வீட்டை பூட்டிவிட்டு துபாய்க்கு சென்று விட்டார். அழகர் குடியிருந்த வீடு பூட்டி கிடந்ததால் நேற்று அதிகாலை அந்த வீட்டில் திருட்டு நபர்கள் முயற்சித்தனர். சத்தம் கேட்டதால் பக்கத்து வீட்டிலிருந்து வீராங்கன் எழுந்து பார்த்தார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. வீராங்கன் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அதில் ஒருவன் பிடிபட்டான். விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் கட்டியங்கோடு பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் என்பது தெரியவந்தது. தப்பி ஓடியவன் தூத்துக்குடி உடன்குடியை சேர்ந்த செல்வகுமார் என்பவரை தேடி வருகின்றனர். பிடிபட்ட சிவசங்கரை திருவரம்பூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.