திருச்சியில் அறிவுசார் சொத்து உரிமைகள் அமலாக்க காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சேர்ந்து ஆறு இடங்களில் குளிர்பானங்கள் தயாரிக்கும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த இடங்களில் பிரபல குளிர்பான நிறுவனங்களின் லேபிளை ஒட்டி குளிர்பானங்கள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணிகண்டம், கள்ளிக்குடி, பீமா நகர், வாழவந்தான்கோட்டை ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் 12000 குளிர்பானங்கள் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டன.