துறையூர்: சுற்றுலா பயணிகளுக்கு தடை.. வெறிச்சோடிய புளியஞ்சோலை

82பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது புளியஞ்சோலை சுற்றுலா தளம். கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள புளியஞ்சோலை சுற்றுலா தளத்தில் வருடம் முழுவதும் தண்ணீர் வந்து கொண்டிருக்கும். இந்த சுற்றுலா தளத்திற்கு திருச்சி மாவட்டம் சேலம் நாமக்கல் கரூர் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தினமும் வந்து செல்வர். இயற்கை எழில் கொஞ்சும் புளியஞ்சோலை சுற்றுலா தளத்தில் கொல்லிமலையில் இருந்து வரும் மூலிகை நீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்வார்கள். 

இந்நிலையில் புளியஞ்சோலை ஆற்றுக்கு தண்ணீர் வரும் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பொழிந்து வருவதை அடுத்து கடந்த 13ஆம் தேதி அன்று சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு வனத்துறையினர் தடை விதித்து உத்தரவிட்டனர். இதனால் கடந்த நான்கு தினங்களாக புளியஞ்சோலை சுற்றுலா தளம் சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. தடை உத்தரவு தெரியாமல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி