அதிமுக ஐடி விங் தலைவராக கோவை சத்யனை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஐடி விங் தலைவராக இருந்த சிங்கை ராமச்சந்திரன், மாணவரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளராக விஜயகுமார் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல புரட்சி தலைவி பேரவையின் துணை செயலாளராக கோவிலம்பாக்கம் மணிமாறன் செயல்படவுள்ளார்.