துறையூர் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் தலைவர் செல்வராணி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் 60 தீர்மானங்களில் பேருந்து நிலையத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு சிலை வைக்கும் அதிமுக கவுன்சிலரின் தீர்மானத்தை தவிர மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து பேச்சுவார்த்தை நடத்திய தலைவர் செல்வராணி பேருந்து நிலைய பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் அந்த சிலைகள் நிறுவ ஏற்பாடு செய்யப்படும் என கூறினார். அதை ஏற்றுக்கொள்ளாத அதிமுக கவுன்சிலர்கள் சிலை வைப்பதற்கான தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூறி தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தலைவர் செல்வராணி தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக கூறியதை அடுத்து அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர். இதனால் துறையூர் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.