துறையூரில் எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி

77பார்த்தது
துறையூரில் எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி
அதிமுக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று 24.12.2022 காலை 11.00 மணியளவில் துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள, அறிஞர் அண்ணா சிலை அருகில், கழக நிறுவனத் தலைவர், பொன்மனச் செம்மல், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகன், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு நகர செயலாளர் அ. அமைதிபாலு தலைமையில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் திருமிகு மு. பரஞ்சோதி எம்.ஏ.பி.எல் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கினார்கள். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக இணை செயலாளர் எக்ஸ் எம்எல்ஏ இந்திரா காந்தி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் அறிவழகன் விஜய், துறையூர் ஒன்றிய செயலாளர் சேனைசெல்வம், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் அழகாபுரி செல்வராஜ், ராம்மோகன், உப்பிலியாபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜாங்கம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூர் கழக செயலாளர் ராஜேந்திரன், அவைத்தலைவர் ரவி வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி