சபரிமலை வளாகத்தில் இருந்து சுமார் 35 லோடு பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படுகிறது. தினமும் சுமார் 15,400 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் வனப்பகுதியில் வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் புகை வெளியேறி அங்குள்ள விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. காற்று மாசு அதிகரிக்கிறது மற்றும் சபரிமலையின் மண்ணின் தரம் பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். வயநாட்டில் சம்பவத்திற்கு பின்னரும் மக்கள் பாடம் கற்காதது வேதனை தருவதாக உள்ளது.