தாபேட்டை அருகே சிட்டிலறையில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் - 1086 பேர் பயனடைந்தனர். திருச்சி மாவட்டம், தா. பேட்டை அருகே சிட்டிலறை சரஸ்வதி வித்யா மானிய துவக்க பள்ளியில் தமிழக அரசின் சார்பில் தும்பலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினர் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை நடத்தினர். முகாமிற்கு சிட்டிலறை ஊராட்சி மன்ற தலைவர் பாலகுமார் தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அசோகன் அனைவரையும் வரவேற்றார். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ் பிரபாகர் தலைமையில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இசிஜி, ஸ்கேன், ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், தொழுநோய் சிகிச்சை, பெண்கள் மருத்துவம், பல், கண், தோல் மருத்துவம், எலும்பு மருத்துவம், நீரழிவு நோய் சிகிச்சை, சித்தா மற்றும் யுனானி சிகிச்சைகள் பொதுமக்களுக்கு செய்யப்பட்டது. முகாமில் 1086 பேர் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர். 9 பேர் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். மருத்துவர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் சுகாதார ஆய்வாளர் சூர்யா நன்றி கூறினார்.