திருச்சி மாவட்டம் தா. பேட்டை ஒன்றியம் எம் புதுப்பட்டி ஊராட்சியில் அயித்தாம்பட்டி மற்றும் சொரியம்பட்டி கிராமங்களில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை அடுத்து தலா ரூ 14 லட்சம் மதிப்பீட்டில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. நேற்று திங்கட்கிழமை அன்று புதிய அங்கன்வாடி கட்டிடங்களை ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன் தலைமை வகித்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சங்கீதா, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திலகம், வார்டு உறுப்பினர் குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் ஊராட்சி மன்றத் தலைவர் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். அங்கன்வாடித் திட்ட அமைப்பாளர்கள் சமையலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.