திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்பாக அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷாவை கண்டித்து விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துறையூர் தொகுதி செயலாளர் துரை. சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தொகுதி துணை செயலாளர் ரஞ்சித், நகரச் செயலாளர் மீசை குமார், ஒன்றிய செயலாளர் சிவா, உப்பிலியாபுரம் ஒன்றிய செயலாளர் வெற்றியழகன், உப்பிலிபுரம் நகர செயலாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் விசிக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.