திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் கடந்த சில தினங்களாக திடிரென இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு துறையூர், காளிப்பட்டி, சிங்களாந்தபுரம், கரட்டாம்பட்டி, மண்பறை ஆகிய பகுதிகளில் இடியுடன் மழை பெய்தது. அப்போது கரட்டாம்பட்டி பகுதியில் தனியார் நிறுவனம் நிறுவியிருந்த ஒரு காற்றாலைக் கருவியை இடி மின்னல் தாக்கியது. இதில் அந்த காற்றலைக் கருவி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அதன் இரண்டு இறக்கைகள் எரிந்து முழுவதுமா சேதமடைந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. எரிந்த போன காற்றாலையை அப்பகுதி மக்கள் நேரில் சென்று பார்த்தனர்.