ஸ்ரீரங்கங்கத்தில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு

83பார்த்தது
ஸ்ரீரங்கங்கத்தில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு
திருவரங்கத்தில் பேரனுடன் கோவிலுக்குச் சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு: இருசக்கர வாகனத்தில் மர்மநபர் தப்பி ஓட்டம். திருவரங்கம் மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி உஷா (வயது 60). இவர் தனது பேரனுடன் அப்பகுதியில் உள்ள வரசக்தி விநாயகர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். பின்னர் வீட்டுக்குத் திரும்பி சாலை ஓரமாக நடந்து சென்றுகொண்டு இருந்தார். 

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் உஷாவின் கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து உஷா கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி