மகாராஷ்டிரா: சிம்ரன் (29) என்ற பெண்ணுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கணவரை பிரிந்தார். பின்னர் ஜாகிர் நசீர் (20) என்பவரை மறுமணம் செய்து கொண்ட நிலையில் கர்ப்பமானார். இந்நிலையில் சிம்ரன் வயிற்றில் உள்ள குழந்தைக்கு நான் தந்தை இல்லை என அவருடன் ஜாகிர் சண்டை போட்டார். அவர் பலமாக அடித்ததில் சிம்ரன் உயிரிழந்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் ஜாகிர் மற்றும் அவர் தாயாரை கைது செய்துள்ளனர்.