
துறையூர் அருகே கிணற்றில் மிதந்த ஆண் சடலம்
துறையூர் அருகே உள்ள அம்மாபட்டியில் செல்லமுத்து என்பவர் கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் காவல்துறையினர் அவரது உடலை மீட்டனர். விசாரணையில் அவர் மன்னச்சநல்லூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பதும் கடைகளில் மிட்டாய் வியாபாரம் செய்து வருவதும் தெரிய வந்தது. அவரது உடலை மீட்ட துறையூர் காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.