திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கடேசபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார். தலைமையில் இன்று (24.12.2024) நடைபெற்ற விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 34.60 லட்சம் மதிப்பீட்டில் வெங்கடேசபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டுவதற்காக பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கங்காதரணி, ஒன்றிய குழு பெருந்தலைவர் சரண்யா மோகன்தாஸ், உதவி இயக்குனர் ஊராட்சிகள் குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.