நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப் ராவ் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, “கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு திடீர் மரணத்திற்கான வாய்ப்பு இல்லை என்பது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது. கொரோனாவுக்கு முந்தைய மருத்துவ சிகிச்சைகள், அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம், அந்தக் குடும்பத்தில் ஏற்கனவே சிலருக்கு ஏற்பட்ட திடீர் மரணம் ஆகியவை இந்த திடீர் மரணங்களுக்குக் காரணம் என்பதும் ஆய்வில் தெரியவந்தது” என பதிலளித்துள்ளார்.