மழைநீர் கால்வாயில் விழுந்த 3 வயது குழந்தைக்கு தீவிர சிகிச்சை

65பார்த்தது
சென்னை துரைப்பாக்கத்தில் மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்த 3 வயது பெண் குழந்தை, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறது. வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பிரதிக்ஷா, மழைநீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்துள்ளார். உயிருக்கு போராடிய நிலையில் குழந்தை மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், பேரிகார்டுகள் வைக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி