மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டியில் இருந்து காரியாபட்டிக்கு செல்லும் அரசுப் பேருந்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளதால் மழை நீர் உள்ளே கொட்டி பெரும் சிரமத்துக்கு ஆளாவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், பேருந்தின் இருபுறங்களிலும் உள்ள கண்ணாடிகள் உடைந்து கீழே விழும் அபாயம் உள்ளதாகவும் கூறுகின்றனர். இதனால் புதிய பேருந்துகளை இயக்க கோரியுள்ளனர்.