சென்னையில் பல ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் நடைபெற்ற திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டார். அவர் பேசுகையில், "உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள், நிறைய பெற்றுக்கொள்ள வேண்டாம். ஜனத்தொகை குறைப்பில் வெற்றிகரமாக தமிழ்நாடு செயல்பட்டதற்காக தற்போது தண்டிக்கப்படுகிறோம். மக்களவை தொகுதி மறுசீரமைப்பை சுட்டிக்காட்டி தான் பேசுகிறேன். நமக்கு தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது” என்றார்.