மதுரை மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “1968ஆம் ஆண்டில் இருந்து மும்மொழி என கூறி வருகின்றனர். இதுவரை இந்தியாவில் எங்குமே மும்மொழி கொள்கை அமல்படுத்த முடியவில்லை. வட இந்தியாவில் 2-வது மொழியை முழுமையாக கற்றுக் கொண்டிருந்தால் 3-வது மொழி தேவைபட்டிருக்காது. இரு மொழி கொள்கையை கூட அமல்படுத்த முடியாதவர்கள், நம்மை 3-வது மொழி கற்க சொல்கின்றனர். அறிவிருப்பவர்கள் யாராவது மும்மொழி கொள்கையை ஏற்பார்களா?” என்றார்.