கொட்டித் தீர்த்த கனமழை.. 4000 நெல் மூட்டைகள் நாசம்

53பார்த்தது
கடலூர் மாவட்டம் ஆதிவராகநத்தம் அருகே கனமழை காரணமாக நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகின. மாவட்டத்தில் நேற்று (மார்ச் 11) முதல் கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இந்நிலையில், அரசு கொள்முதல் நிலையத்திற்கு வெளியே வைக்கப்பட்டு இருந்த 4000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்துள்ளது. இதனால் பதறிப்போன விவசாயிகள் மற்றும் ஊழியர்கள், கொள்முதல் நிலையத்தை சுற்றி தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றி வருகின்றனர். மேலும், விற்பனைக்காக நெல் மூட்டைகளை கொடுத்த விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி