திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையுடன் கூடிய பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிராக கண்ட்டோன்ட்மென்ட் காவல்துறை உதவி ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஆனாலும் இங்கு, டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன், பூட்டப்பட்ட பின்பு, பார் மூலம் கள்ளத்தனமாக, இரண்டு மடங்கு விலை வைத்து மது பாட்டில்கள் விற்பனை அமோகமாக நடந்து வந்தது. மேலும், காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம் போன்ற விடுமுறை நாட்களில் கூட, மது விற்பனையை நிறுத்துவது இல்லை. இதுகுறித்த தொடர் புகார்களில் அடிப்படையில், கண்ட்டோன்மென்ட் போலீஸார் நேற்று காலை திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது மது விற்பனையில் ஈடுபட்ட பார் சப்ளையர்கள் திருச்சி வையம்பட்டியை சேர்ந்த செல்லத்துரை (54), உறையூர் தெற்கு மாதுளம் கொல்லைத் தெருவை சேர்ந்த ரமேஷ் (55) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிமிடருந்து 90 குவார்ட்டர் மதுபாட்டில்கள், 5 பீர் பாட்டில்கள், 35 ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையை போலீஸார் பறிமுதல் செய்தனர்.