திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரத்தில் பொதுமக்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நான்கு வழி சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல், சுங்கச்சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து இதை செய்துள்ளனர். இன்று (மார்ச். 12) சுங்கச்சாவடி திறக்கப்பட இருந்த நிலையில் நடந்த சம்பவத்தால் அனைத்து பொருட்களும் சேதமடைந்தன. போலீஸ் விசாரிக்கிறது.