சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற திருமண விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமணத்தில் தமிழக பாஜகவை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அதில் கரு.நாகராஜன், எச்.ராஜா ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் கைகுலுக்கி சில நிமிடங்கள் பேசி கொண்டிருந்தார்கள். அரசியல் தொடர்பாக எதுவும் பேசாமல் நலம் விசாரித்து கொண்டனர்.