விளாத்திகுளம் - Vilathikulam

வாகன சோதனையில் போலிசார் ஈடுபட்டு வருகின்றனர்

சாத்தான்குளம் பகுதியில் வாகன சோதனையில் போலிசார் இன்று காலை 6 மணி முதல் ஈடுபட்டு வருகின்றனர் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் 4 இடங்களில் போலீசார் மாவட்ட எல்லை பகுதியில் சோதனை சாவடி அமைத்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளே வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் போலீசார் மாவட்டம் முழுவதும் இத்தகைய சோதனை சாவடி அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சங்கரன்குடியிருப்பு, இடைச்சிவிலை, பெரியதாழை, செங்குளம், உள்ளிட்ட 4 இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைத்து, தலா ஒவ்வொரு சோதனை சாவடியிலும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையிலான இரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் இந்த சோதனையானது தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி முழு வீச்சில் தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా