மேல்மாந்தை பெத்தனாட்சியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

79பார்த்தது
மேல்மாந்தை பெத்தனாட்சியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
மேல்மாந்தை ஸ்ரீ பெத்தனாட்சியம்மன் திருக்கோவிலில் மாசிமாத கடைசி வெள்ளியை முன்னிட்டு தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் திருக்கோவிலில், மாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மேலும் கடைசி வெள்ளியை முன்னிட்டு தீமிதி திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர். புகழ்பெற்ற இந்த பெத்தனாட்சி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதையொட்டி ஏராளமான போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி