நீதிமன்றம் அனுமதி பெற்று ஸ்டெர்லைட்ஆலைக்கு ஆதரவாக போராட்டம்

54பார்த்தது
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட ஆலைகளை திறக்க மத்திய அரசு மற்றும்தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதேபோன்று சிப்காட் தொழில் வளாகத்தில் புதிய தொழிற்சாலைகளை உடனடியாக திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச் சங்கம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது

ஆர்ப்பாட்டத்திற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்து போராட்டம் நடைபெறும் பகுதியில் பலத்த போலீஸ் குவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நல சங்கம் சார்பில் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது தங்களது போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது இதைத் தொடர்ந்து நீதிமன்றம் சென்று இந்தப் போராட்டத்திற்கு அனுமதி வாங்க உள்ளதாகவும் அவ்வாறு நீதிமன்றத்தில் அனுமதி வழங்கும் என நம்புகிறோம். அப்படி அனுமதி கிடைக்கவில்லை என்றால் ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் போராட்ட ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி