தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் பால் விலையை உயர்த்தும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். அண்மைக்காலமாக தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.